கோவை கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி பணத்தை பறித்த 3 சிறுவர்கள் கைது..!

கை கால்களில் காயம் ஏற்படுத்தி 2,200 ரூபாயை வழிப்பறி செய்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி பணத்தை பறித்துசென்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம், டி.ஜி.நகர் அண்ணாதுரை என்பவரது மகன் கனகமுத்து (34) சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தில் வேலைமுடித்து வீட்டிற்கு செல்ல தாமரைக்குளம் பஸ் நிறுத்தத்திற்க்கு பஸ் ஏற நடந்து சென்றார்.

தாமரைக்குளம் சுடுகாடு அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று சிறுவர்கள் கனக முத்துவிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்று சொல்லிய கனவு முத்துவை அவர்கள் கத்தியால் தாக்கி உள்ளனர்.

இதில் கை கால்களில் காயம் ஏற்பட்ட கனக முத்துவிடம் இருந்த 2,200 ரூபாயை வழிப்பறி செய்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, காயமடைந்த கனகமுத்துவை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

இந்த நிலையில், கனகமுத்துவிடம் பணத்தை பறித்து சென்ற 3 சிறுவர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒரு சிறுவனுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் 3 சிறுவர்களும் நீண்ட நேரம் தாமரைக்குளம் அடுத்துள்ள முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பதுங்கி இருந்து விட்டு காலில்பட்ட காயத்திற்க்கு சிகிச்சை பெற பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தான்.

அங்கு ஏற்கனவே கனகமுத்துவும் சிகிச்சை பெற்று வந்ததால் கனகமுத்து தன்னை கத்தியால் குத்திய சிறுவனை பார்த்ததும், இவன்தான் தன்னை கத்தியால் குத்தியவர் என போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

உடனே போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்ததில் அந்த சிறுவர்கள் பொள்ளாச்சி பாரத் நகர் 2வது வீதியை சேர்ந்த 17வயது சிறுவன் என்பதும், அவனுடன் வந்தவர்கள் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 2 சிறுவர்கள் என மொத்தம் 3 சிறுவர்களையும் கிணத்துக்கடவு போலீசார் போலீஸ்நிலையம் கொண்டுவந்து விசாரித்து கனகமுத்துவிடம் பறித்துசென்ற 2,200 பணம், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்

சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...