இதையடுத்து, கள்ளு இறக்கி விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 லிட்டர் கள்ளினை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் கள்ளு இறக்கி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூர் பகுதியில் தென்னந்தோப்புகளில் தமிழகத்தில் தடைசெய்யபட்ட கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இன்று உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் சொக்கனூர் பகுதியில் தென்னந்தோப்புகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, சொக்கனூர் பகுதியில் உள்ள பாறைதோட்டத்தில் கள்ளு இறக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதேபோல், அதே பகுதியில் ஜெயக்குமார் என்பவர் தோட்டத்திலும் கள்ளு இறக்கி விற்பனை செய்வது தெரிந்தது
இதையடுத்து, கள்ளு இறக்கி விற்பனை செய்த காளிமுத்து(35), ஜெயக்குமார்(50) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 12 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.