மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி போஸ்டர்கள், கொடிக்கம்பங்கள் இருக்கிறதா என்று சோதனை நடத்தினர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி தேர்தலுக்கான வாக்கு சாவடி மையங்களில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை இன்று கிணத்துக்கடவு காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் நேரில் சென்று அங்கு உள்ள வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட பகவதிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், அங்கே பாதுகாப்பு குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பின்னர் அங்குள்ள ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.