விதிமுறைகளை மீறுவோருக்கு சட்டப்படி ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
கோவை: கோவையில் போலி முத்திரையிட்ட ஐஎஸ்ஐ வாட்டர் ஹீட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை இடையர்பாளையம் அருகே வாட்டர் ஹீட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பின் கோவை கிளை தலைவர் மீனாட்சி கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு தயாரிக்கப்படும் வாட்டர் ஹீட்டர் கலைக்கு முறையான அனுமதியின்றி போலியான ஐஎஸ்ஐ முத்திரை பதித்து வந்தது தெரியவந்தது. இதைடுத்து, அங்கிருந்த வாட்டர் ஹீட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் கூறும்போது:-
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரையிட்ட பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0422- 2240141, 2249016, 2245984 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம் அல்லது புகார் குறித்த விவரங்களை [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும், விதிமுறைகளை மீறுவோருக்கு சட்டப்படி ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.