இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை வால்பாறை அருகே செங்குத்து பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே செங்குத்துபாறை எஸ்டேட் பகுதி உள்ளது. அங்கு சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சிவகாமி என்பவரின் வீட்டில் மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் வீட்டில் உள்ள மின் பெட்டியில் தீ பிடித்து உள்ளது.

இதையடுத்து, குடியிருப்பில் வெற்றிவேல், ஜோதிவேல், பார்வதி, சிவகாமி, ஜெயகலா ஆகிய ஆறு வீடுகளில் தற்போது 3 வீடுகளில் தீப்பிடித்தது.
இந்நிலையில், ஜோதிவேல், பார்வதி, சிவகாமி ஆகிய 3 பேர்களின் வீடுகள் முற்றிலும் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது. இதில் வீட்டிலிருந்த டிவி, பீரோ, கட்டில் வாஷிங் மெஷின், துணி, உணவுப் பொருட்கள், நகைகள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பலாகியது.

இதனையடுத்து, சம்பவம் அறிந்த வால்பாறை தீயணைப்புத் துறையினர் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்கள் வாகனத்தின் மூலம் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.