திருப்பூரில் மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டு மறு வரையறை செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மாநகராட்சி ஆணையரைபொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மறு வரையறை செய்யப்பட்டது. இதில் வார்டு எல்லை பகுதிகள் முறையாக பிரிக்கப்படாமல் குளறுபடி நடைபெற்று உள்ளதாகவும் குறிப்பாக 48 வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர், எம்.ஆர்.ஜி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை 47 வது மற்றும் 48 வது வார்டு என பிரித்து மறு வரையறை செய்துள்ளதாகவும் மேலும் ஒரே வீட்டை சேர்ந்தவர்களுக்கு இருவேறு கவுன்சிலர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்கள் பிரச்சனைகளுக்கு எந்த கவுன்சிலரை அணுகுவது என குழப்பம் நிலவுவதாகவும் பொதுமக்கள் மற்றும் 48 வது வார்டு வேட்பாளர்கள் நல்லூர் மண்டல அலுவலகத்திற்குஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்ற மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியைமுற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மறு வரையறை குளறுபடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...