பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள கோவை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை தெற்கு மாவட்டத்தில் அனைத்து நகராட்சி பேரூராட்சிகளில் திமுக வெற்றிபெற பாடுபடுவோம் என்று பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள கோவை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் திமுக சார்பில் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை கூறி வாக்குகளை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கடந்த 9 மாதங்களாக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி வேட்பாளர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் திமுகவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். ஏற்கனவே பெரிய நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றி முதல் வெற்றியை பதித்துள்ளது.
இதேபோல் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் அமோக வெற்றி பெறுவோம் என்று மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.