கோவையில் பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியர்களை நியமனம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம்..!

கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் நிலையில் பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியர்களை நியமனம் செய்யக் கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இன்று கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் விருப்ப இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்நிலையில், கோவை சங்கர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் முத்துக்கல்லூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி அப்பள்ளியின் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் கூட்டரங்கிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சங்கர் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், முத்துக்கல்லூர் பள்ளியில் 7 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளி மற்றும் வால்பாறையில் உள்ள இரு துவக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும், வெள்ளலூர் பகுதியில் ஆரம்ப பள்ளி கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். ஆகவே உடனடியாக அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இவர்களின் போராட்டத்தால் கலந்தாய்வு வந்த இதர ஆசிரியர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...