கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 8, சிவ நகர், செந்தோட்டம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்வதை தடுக்க கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் 15, நகராட்சி பகுதிகளில் 21 மற்றும் பேரூராட்சியில் 33 என மொத்தம் 69 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1.80 லட்சத்தை நேற்று பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர். கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 8, சிவ நகர், செந்தோட்டம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக பைக்கில் வந்தகாளப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.80 லட்சம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.
தேர்தல் விதிமுறைகள் படி, உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய்.50,000 மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால், அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு, ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பின்னர் உரிய ஆவணங்கள் காண்பித்து, பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.