கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: கூட்டணி கட்சிகள் வார்டு ஒதுக்கீட்டை வெளியிட்டது திமுக...!

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி வார்டு ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கோவை: கோவை மாநகராட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக கூட்டணி வார்டு ஒதுக்கீடு இன்று வெளியிடப்பட்டது. வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடாதது கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நேற்று, பாஜக மற்றும் அதிமுகவின் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி முறிந்ததையடுத்து, பாஜக தனித்துப் போட்டியிடும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்ய மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு வார்டு ஒதுக்கீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையை திமுக கோட்டைவிட்ட காரணத்தினால், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், யாருக்கு சீட் வழங்குவது? வெற்றிக்குக் கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக, கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கோவை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான்கு வார்டுகள், மதிமுகவிற்கு முன்று வார்டுகள், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு இரண்டு வார்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு வார்டு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து தகவல் எதுவும் இல்லாத நிலையில், இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னும் சற்று நேரத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கான வார்டுகள் அறிவிக்கப்படும் என்றும், 7 முதல் 9 வார்டுகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...