கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.17.5 லட்சம் பணம் பறிமுதல்..!

உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையால் 17,50,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கதக்கத்துல்லா என்பவரின் காரை சோதனை செய்த போது அதில் ரூ.17.5 லட்சம் பணம் இருந்தது.

இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சாட்சிகளாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காதர் ஜெய்தின் மற்றும் அப்துல் காதர் இருந்தனர். மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா அவர்கள் முன்னிலையில் கைபற்றிய பணத்தை பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர்.

இது குறித்து கதக்கத்துல்லா என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறியதாவது:-

பறக்கும் படை கைபற்றிய பணமானது, நான் இடம் வாங்குவதற்காக எடுத்து வந்த பணம் என்றும் கூடிய விரைவில் உரிய ஆவணங்களை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்பித்த பின்பு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...