நீலகிரி குன்னூர் மலை ரயில் பாதையில் பிறந்த ஒரு மாத குட்டியுடன் காட்டுயானை முகாம்..!

காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் பிறந்த ஒரு மாத குட்டியுடன் காட்டுயானை முகாமிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் ஹில் குரோ ரன்னிமேடு ரயில் நிலையம் இடையே பிறந்து ஒரு மாதம் ஆன குட்டியுடன் யானை கடந்த ஒரு மாத காலமாக முகாமிட்டுள்ளது.

அவ்வப்போது மலை ரயில் பாதையில் உலா வந்து, மலை ரயில் எஞ்சினுக்கு ஊற்றக் கூடிய நீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.

குட்டியுடன் உள்ளதால் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் அதே பகுதியில் முகாமிட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதே பகுதியில் உலா வருவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மலைப்பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விபத்து அபாயம் கருதி பாதுகாப்பான வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...