காய்ச்சல், சளி பாதிப்பால் தள்ளாடும் கோவை தொழில் நிறுவனங்கள்: 2 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு என தகவல்..!

கொரோனா மற்றும் சாதாரண காய்ச்சல், சளி நோயினால் 25 சதவீத தொழிலாளர்கள், அதாவது 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.


கோவை: கோவை தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு என தொழில்துறையினர் தகவல் அளித்தனர்.

கொரோனா மற்றும் சாதாரண காய்ச்சல், சளி நோயினால் 25 சதவீத தொழிலாளர்கள் அதாவது 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான 'TANSTIA' துணைத்தலைவர், எஸ். சுருளிவேல் கூறியதாவது:-



கோவை மாவட்டத்தில் உற்பத்தி பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இந்தவாரம் முதல் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் உற்பத்தி முழுவீச்சில் செயல்படத் துவங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கொரோனா மற்றும் சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களால் தொழில் நிறுவனங்களில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் மொத்தமுள்ள தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் அதாவது 2 லட்சம் பேர் கொரோனா மற்றும் சாதாரண காய்ச்சல், சளி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு உடனடியாக அளிக்கப்படுகிறது. இது தவிர கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு வழிகாட்டு நெறி முறைப்படி விடுமுறை அளிக்கப்படுகிறது" என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (CODISSIA) தலைவர், ரமேஷ் பாபு கூறியதாவது:-



கொரோனா, சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய் தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உண்மைதான். இன்றைய சூழலில் 20 முதல் 25 சதவீதம் தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்களில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சீரான முறையில் பின்பற்றப்படும் காரணத்தால் இன்று வரை பெரிய அளவில் நோய்த் தொற்று பரவவில்லை, உற்பத்தியும் பாதிக்கப்படவில்லை.

தொழிற்சாலை நுழைவாயில் பகுதியில் உடல் வெப்பம் பரிசோதனை, தவிர ஆக்சிஜன் அளவு சரிபார்த்தல் மேலும் வேறு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

நோய் பாதிப்பு அல்லது அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தொழிலாளருக்கு விடுமுறை அளிப்பதுடன் கொரோனா அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...