நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவை வேட்பாளர்களை அறிவித்த எஸ்.டி.பி.ஐ கட்சி..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட உள்ள நிலையில், முதல் கட்டமாக 8 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.



கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எஸ்.டி. பி.ஐ கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்டிபிஐ கட்சி கோவை மாநகரில் போட்டியிடக் கூடிய வார்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.



முதல் கட்டமாக 8 வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி 77- பர்சானா, 78- சைபுநிசா, 79- அஸ்மா, 82- ரஷீதா பேகம், 84- அலீமா, 86- முஸ்தபா, 87- சிவக்குமார், 95- முஹம்மது சலீம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி கோட்டைமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் கூறுகையில்,



தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. கோவையில் முதல் கட்டமாக 8 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இனி அடுத்தடுத்த வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

நாங்கள் தணித்து களம் காண்கிறோம். நேர்மையான உள்ளாட்சி என்பதே எங்களின் தேர்தல் வாக்குறுதி. அமமுக கூட்டணி குறித்து தற்போது வரை பேச்சுவார்த்தை இல்லை. முந்தைய ஆட்சியிலும் சரி, தற்போதைய ஆட்சியிலும் சரி இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இடங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.



கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லை. எஸ்டிபிஐ கட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...