தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார்.
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
சென்னை உள்பட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மற்றும் வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்தத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 28-ஆம் தேதி தொடங்கும் எனவும் வேட்புமனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும், வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவித்தார்.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அடுத்த மாதம் 4-ஆம் தேதி கடைசி நாள் 5ஆம் தேதி மனுக்களைப் பரிசீலனை செய்யப்படும் எனவும் 7 தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை 22-02-2022 அன்று நடைபெறும். தேர்வில் வெற்றி பெறுபவர்கள்
02-03-2022 அன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.
மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாள் மார்ச் மாதம் 4 தேதி முதல் கூட்டம் நடைபெறும் எனவும் அன்றைய தினம் இத்தகைய பதவிகளுக்குத் தேர்வு நடக்கும் என தெரிவித்தார்.
இன்று முதல் தேர்தல் நடைபெறக் கூடிய பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
சிசிடிவி கேமரா பதிவு
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் மனுக்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகள் கண்காணிப்பு கேமரா சிசிடிவி பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
12 ஆயிரத்து 838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குத் தேர்தல்
நேரடித் தேர்தல்கள் நடைபெற உள்ள 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிக்கு உட்பட்ட 3, 843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 490 பேரூராட்சிக்கு உட்பட்ட 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளில் கூடுதலாகத் தொற்று தடுப்பு பொருட்களான 13 பொருட்கள் வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கையுறை, உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகள்
மாநகராட்சிகளில் 1,57,158 வாக்குச் சாவடிகளும் நகராட்சிகளில் 7417 வாக்குச்சாவடிகளில் பேரூராட்சியில் 8454 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர்கள் ம மொத்தம் 31 ,029 வாக்குச்சாவடிகள் எனவும் இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வாக்காளர் எண்ணிக்கை
இந்த தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளர்களும் ஒரு கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளர்கள் 4324 மூன்றாம் பாலினத்தவர்கள் என என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தேர்தல் நடைபெறும் இடங்களில் மாவட்டம் தோறும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி கண்காணிப்புப் பணியல் ஈடுபடுவார்கள் என்றும் சென்னையில் 3 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்தார். வாக்காளர்களுக்குப் பணம் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேரணியாகச் சென்று கூட்டம் கூட்டி வாக்கு சேகரிக்க தடை
தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுடன் மூன்று பேர் சேர்ந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பேரணியாகச் சென்று கூட்டமாகச் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும் அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளின்படி உள்ள அரங்குகளில் 100 பேர் அல்லது உள் அரங்குகளில் இருக்கக்கூடிய கொள்ளளவில் 50 சதவீத நபர்களைக் கொண்டு தேர்தல் கூட்டங்களை நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.
அரசு புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது
தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம். இதற்குமேல் தொகையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் உரிய ரசீது வைத்திருக்க வேண்டும்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், பறக்கும் படையினரின் விவரங்கள் நாளை வெளியிடப்படும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வைப்புத் தொகை
பேரூராட்சி வார்டு உறுப்பினர்-500
தேர்தல் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-1000ரூ
தேர்தல் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-2000
இதர வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான தேர்தல் வைப்புத் தொகை
பேரூராட்சி வார்டு உறுப்பினர்-1000
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-2000
தேர்தல் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-4000ரூ
தேர்தல் செலவினங்கள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினக் கணக்குகளைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு தாக்கல் செய்யத் தவறுபவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் மூன்று ஆண்டுகளுக்குப் போட்டியிட இயலாதவாறு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
பேரூராட்சி வார்டு உறுப்பினர்-17,000 நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (முதல் மற்றும் இரண்டாம் நிலை)-ரூ .34,000 நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை)-85,000 மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக)-85,000 பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்-90,000.