கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கிணத்துக்கடவு அருகே தாமரைக் குளத்தில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக் குளத்தில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.

கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் மாலிக்கராஜ்(23) இவரது நண்பர் புலியகுளம் பகுதியை சேர்ந்த கைலாஷ்(23) என்பவரைத் தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிணத்துக்கடவு அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென வலதுபுறமாகத் திரும்பியது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மாலிக்ராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் மாலிக்ராஜ், கைலாஷ் ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...