சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிவு

மழை இல்லாத காரணத்தினால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி சார்பாக அணையிலிருந்து தற்போது 88 எம்.எல்.டி நீர் மட்டுமே குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.


கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும், நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரைத் தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.

சிறுவாணி அணைப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 45 அடி வரை உயர்ந்தது. இதனிடையே தற்போது மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 39 அடியாக சரிந்துள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சி சார்பாக அணையிலிருந்து தற்போது 88 எம்.எல்.டி நீர் மட்டுமே குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...