குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமரை கண்டிப்பதாகவும், தமிழகத்தில் அணிவகுப்பு நடத்திய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.



கோவை: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியரசு தின விழாவான இன்று டெல்லியில் நடைபெறும் மாநில ஊர்திகள் அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திகளுக்கு சில காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, குடியரசு தினமான இன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் கோவை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விடுதலை வீரர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமரை கண்டிப்பதாகவும், டெல்லியில் மறுக்கப்பட்ட ஊர்தியை தமிழகத்தில் அணிவகுப்பு நடத்திய முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உட்பட பல அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...