நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவை மாநகராட்சியில் 3000க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு..!

ஜனவரி மாத நிலவரப்படி, மாநகராட்சியில் 15.61 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் இதில், 7.80 லட்சம் ஆண்கள், 7.81 லட்சம் பெண்கள் மற்றும் 297 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் 3,612 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடுகளை தொடங்கியுள்ளன.

இது குறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில்;

கோவைக்கு உட்பட்ட பகுதிகளில் 1,290 வாக்குச் சாவடிகளும் 3,612 இயந்திரங்களும், 1,548 வாக்குச் சீட்டுக் கட்டுப்பாட்டு அலகுகளும் பயன்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி வாக்கு சாவடிகளை அமைக்கும் இடங்களை இறுதி செய்துள்ள நிலையில், 1,290 சாவடிகளில் 169 சாவடிகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

169 மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய (சென்சிட்டிவ்)சாவடிகள் என்றும் இந்த வாக்கு சாவடிகள் ஒவ்வொன்றிலும் தேர்தல் நடத்துவதை நேரலையில் ஒளிபரப்புவதற்காக கேமராக்களை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனவும் தற்போது, வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்த பிறகு தெருக்கள் வார்டுகள் என மக்களை தொடர்பு கொண்டு வாக்காளிக்க தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்திருப்பதை கோவை மாநகராட்சி உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி மாத நிலவரப்படி, மாநகராட்சியில் 15.61 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் இதில், 7.80 லட்சம் ஆண்கள், 7.81 லட்சம் பெண்கள் மற்றும் 297 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் தேர்த்தலுக்கான முன்னெச்சரிக்கை செயல்முறைகளை மக்கள் இடத்தில் முடித்தவுடன், கோவை மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

100 வார்டுகளுக்கு 20 உதவி தேர்தல் அலுவலர்கள் என அவர்கள் நடத்தும் ஆய்வின் முடிவு படி மாநகராட்சி ஆணையாளரிடம் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்படும்.

தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை பயன்படுத்துவதற்காக அறைகளை ஒதுக்கும் பணியிலும் மாநகராட்சி ஈடுபட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்கு எண்ணிக்கையை மண்டல வாரியாக நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...