தேசத்தின் மண்வளம்‌ காப்போம்..!! குடியரசு தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியேற்றி சத்குரு வாழ்த்து..!

112 அடி ஆதியோகியை தரிக்க செல்லும்‌ நுழைவு வாயிலான மலைவாசல்‌ முன்பு குடியரசு தின விழா நடைபெற்றது.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 73-ம்‌ ஆண்டு குடியரசு தின விழா இன்று மிகச்‌ சிறப்பாக கொண்டாடப்பட்டது.



112 அடி ஆதியோகியை தரிக்க செல்லும்‌ நுழைவு வாயிலான மலைவாசல்‌ முன்பு இவ்விழா நடைபெற்றது.



இந்த கொண்டாட்டத்தில்‌ கொடியேற்றி பேசிய சத்குரு, "தமிழ்மக்கள்‌ அனைவருக்கும்‌ 73-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்‌. நம்‌ பாரததேசம்‌

நாகரீகத்திலும்‌, கலாச்சாரத்திலும்‌ உலகிலேயே மிகவும்‌ பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம்‌ பெற வேண்டுமென்றால்‌, அந்நாட்டில் உள்ள மண்‌ வளமாக இருக்க வேண்டும்‌. மண்ணில்‌ இருக்கும்‌ உயிர்சக்தி போய்விட்டால்‌, ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான்‌ நம்தேசம்‌ சென்று கொண்டு இருக்கிறது.

இந்த குடியரசு தினநாளில்‌ நம்மண்ணை வளமாக வைத்துக் கொள்ளவும்‌, இந்த தலைமுறைக்கும்‌, அடுத்து வரும்‌ தலைமுறைகளுக்கும்‌ நலமான வாழ்வு வழங்கவும்‌ நாம்‌ உறுதி ஏற்போம்‌." என்று தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...