கோவையில் கிறிஸ்தவ ஆலய சிலையை சேதப்படுத்திய விவகாரம்: 2 பேரிடம் போலீசார் விசாரணை..!

இதனிடையே, சிலை சேதப்படுத்தப்பட்ட டிரினிட்டி ஆலயத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சென்று பார்வையிட்டார்.


கோவை: கோவையில் கிறிஸ்தவ ஆலய சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே டிரினிட்டி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இதன் நுழைவுவாயில் அருகே கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை உள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், அந்த சிலையை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.



இது குறித்து ராமநாதபுரம் போலீசார் தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மர்ம ஆசாமிகளை கைது செய்ய வற்புறுத்தி ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், சிலை உடைப்பு தொடர்பாக ஒரு அமைப்பை சேர்ந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, சிலை உடைப்பு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் துருவித்துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் துப்புத்துலங்கி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.



இந்த நிலையில், சிலை சேதப்படுத்தப்பட்ட டிரினிட்டி ஆலயத்துக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சென்று பார்வையிட்டார்.



அவர், நடந்த சம்பவம் பற்றி ஆலய நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...