கோவையில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் மூலம் 11.29 கோடி வருமானம்..!

கடந்த ஆண்டு இதே எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கிய போது ரூ.11.68 வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 39 லட்சம் குறைவாகும்.


கோவை: கோவையில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் மூலம் 11.29 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டைவிட 39 லட்சம் குறைவாகும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் ஊருக்கு செல்வதற்கும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் என மொத்தம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இவை திருப்பூர், மதுரை, தேனி, பழனி, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து சென்றது.

இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.11.29 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இதே எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கிய போது ரூ.11.68 வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 39 லட்சம் குறைந்தது.

இதுகுறித்து கோவை கோட்டம் அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகள் கடந்த ஆண்டு 45 லட்சம் கிலோ மீட்டர் சென்று வந்தது. இந்த ஆண்டு 49 லட்சம் சென்றுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர் செல்வதை தவிர்த்து இங்கேயே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். சிறப்பு பேருந்துகள் இயக்கியதில் ரூ.11.29 வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...