குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து இரு சக்கர வாகன பேரணி

கோவை பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகன பேரணியில் பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.


கோவை: குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து இரு சக்கர வாகன பேரணியை மேற்கொண்டனர். கோவை பவர் ஹவுஸ் முதல் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் வரை இரு சக்கர வாகன பேரணியானது நடைபெற்றது.



பேரணியில், கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அவர்களின் சங்கங்களின் கொடியினை வாகனங்களில் கட்டியவாறு பேரணி மேற்கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.



"தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே, பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்திடு, வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்கு, கான்டெக்ட் தொழிலாளிகளை நிரந்தரமாக சம ஊதியம் வழங்கு" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கபட்டது.

கோவையில் இன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் இருசக்கர வாகன பேரணி காவல்துறை அனுமதியை மீறி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...