73 வது குடியரசு தினவிழா: கோவை மாநகராட்சி ஆணையர் தேசிய கொடி ஏற்றி மரியாதை; சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ்.

கொடி ஏற்றுவதற்கு முன்னதாக மாநகராட்சி அலுவலகத்திலுள்ள காந்தி சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்தார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி ஆணையர் கௌரவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் இன்று 73வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சி ஆணையர், ராஜகோபால் சுங்கரா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்திலுள்ள தேசத்தந்தை, காந்தி அடிகளாரின் சிலைக்கு அணிவகுப்பு நடத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கார சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி கௌரவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், "கோவை மாநகராட்சியில் 2வது முறை தேசிய கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது மிக நெகிழ்ச்சியானது ஆகும். கோவைக்கு தனி சிறப்பும், வரலாறும் உள்ளது. பெருமைமிக்க, கோவை மாநகராட்சியில், பணியாற்றுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தியாவின் சிறந்த நகரமாக, நற்பெயருடன் கோவை விளங்க வேண்டும் என்பதே என் ஆசை.



தற்போது, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதியாக பணியாற்றும் நாம் அனைவரும், சிறப்பாக மக்கள் சேவை ஆற்ற வேண்டும்", என்றார்.



விழாவில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, மாநகராட்சியின் அனைத்து துறையின் தலைமை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...