கோவையில் 13 விழுக்காடு மட்டுமே கொரோனா படுக்கைகள் நிரம்பியுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

மேலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்வோரில் தொற்று கண்டறியப்படுவோரின் சதவீதம் 19.7 ஆக உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: கோவையில் 13 விழுக்காடு மட்டுமே கொரோனா படுக்கைகள் நிரம்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை பார்வையிட்ட அவர், தடுப்பூசி கையிருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பேசுகையில், கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் 14,528 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் தயாராக உள்ளது. தற்போது வரை இதில் 13 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

கோவையில் தொற்று அதிகமாக உள்ள சாலைகள் அல்லது வீடுகள் அதிகம் உள்ள 176 மைக்ரோ கண்டெயின்மெண்ட் ஜோன்கள் கண்டறியப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோரில் தொற்று கண்டறியப்படுவோரின் சதவீதம் 19.7 ஆக உள்ளது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், எந்த சூழலையும் எதிர்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார்.

Newsletter

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...