மேலும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் அறிவுரை வழங்கினார்.
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொகுப்பில் பொருட்கள் சரியாக இல்லை என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து செய்திகளும் வெளியான நிலையில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டமும் நடத்தி இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மேலும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.