திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது, காளை முதல் இடத்தை பிடித்தது. பரிசு பெற்ற அனைவருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, பரிசுகளை வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது.

செட்டிபாளையம் அருகே இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த போட்டியை, அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காலை 7 மணி அளவில் இருந்து 5:30 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 900 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுமார், 400 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கு பெற்று காளைகளை அடக்கினர்.

காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு காளைகள் வீரர்களுக்கு ஆட்டம் காட்டின.

சீறி வந்த பல காளைகளை வீரர்கள் அடக்கினர். அவ்வப்போது மாடுபிடி வீரர்களுக்குள் தகராருகளும், ஆள்மாறாட்டம் நடைபெற்றது அதனை கண்டறிந்த விழா கமிட்டியினர் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், 21காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியை சேர்ந்த ஆங்கில பி.ஏ பட்டதாரியான மணி என்பவர் முதல் பரிசான காரை வென்றார். அதனை தொடர்ந்து, 19 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் பைக்கை பரிசாக வென்றார்.

மூன்றாவது பரிசாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திக் 18 காளைகளை அடக்கி இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.
இந்த போட்டியில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது, காளை முதல் இடத்தை பிடித்தது பரிசு பெற்ற அனைவருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ். சமீரன், திமுக கட்சியினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின், முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று உள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டியானது நடைபெற்றது. மேலும் இன்றைய தினம் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு பெண்கள் மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர், அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல் பரிசை வென்ற மணி, தான் பி.ஏ ஆங்கிலம் பட்டதாரி என்றும் தற்போது விவசாயம் செய்து வருவதாகவும், அரசு வேலை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும், என கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய இரண்டாம் பரிசு வென்ற பிரபாகரன் பேசுகையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து முதலிடம் பிடித்த வருவதாகவும், தற்போது, கோவையில் 2-வது இடத்தை பிடித்து உள்ளதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய கார்த்திக், கோவையில் இம்முறை போல கடந்த ஆண்டும் கோவையில் நடத்த ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். அதே சமயம், கடந்த ஆண்டு வெற்றி பெற்றதற்கு "பைக்" பரிசாக தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வரை அந்த பரிசு தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.