கொரோனா பாதிப்பு வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளதாகவும், பாதுகாப்பான இடவசதி இல்லாத தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் குழுக்களாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளதாகத் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
கோவை: கொரோனா பாதிப்பு வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளதாகவும், பாதுகாப்பான இடவசதி இல்லாத தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் குழுக்களாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளதாகத் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளதாகவும், பாதுகாப்பான இடவசதி இல்லாத தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் குழுக்களாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளதாகத் தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான(TANSIA) துணைத் தலைவர், சுருளிவேல் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை பிரிவுகளின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்குநாள் கோவை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது இதன் காரணமாகக் கோவிலில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் பலர் குழுக்களாக தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லத் துவங்கியுள்ளனர்.
பாதுகாப்பான இடவசதி இல்லாத தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தான் அதிக எண்ணிக்கையில் குழுக்களாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

தினமும் ஆயிரம் பேர் வீதம் ரயில்களில் புறப்பட்டுச் செல்கின்றனர். இதுவரை 30 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று உள்ளனர். இவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு பின்புதான் மீண்டும் கோவைக்குத் திரும்ப ஆர்வம் காட்டுவார்கள்.
எனவே எதிர்வரும் மாதங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியில் அமர்த்தி உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழக அரசு வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதனால் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின்(ITF) கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவல் முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின் போது போன்று இல்லாமல் தற்போது நோய்த்தொற்று பற்றிய சரியான புரிதல் உள்ளதால், தேவையான பாதுகாப்பு முறைகளைக் கையாள்வதோடு, தொடர் வேலைவாய்ப்பும், நல்ல சூழலும் உள்ளதால், ஜவுளி தொழில்துறையில், வட மாநில தொழிலாளர்கள் இதுவரை சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படவில்லை. இங்கேயே தங்கி பணியைத் தொடர்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.