கோவை அருகே முககவசம் அணியாத நகைக்கடை உரிமையாளர் கைது

கோவை அருகே முககவசம் அணியாத நகைக்கடை உரிமையாளரை காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவை அருகே முககவசம் அணியாத நகைக்கடை உரிமையாளரை காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மூன்றாவது அலை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் வெளியே செல்லும் போது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என கண்காணிக்கக் கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

காரமடை நகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றுபவர் மாரியப்பன் வயது 58, நேற்று மாலை இவர் காரமடை சொர்க்க வாசல் வீதி வழியாக உள்ள பகுதிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தார்.

அப்போது அந்த பகுதியில் நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முகமது நவ்பிக் 28 - என்பவர் முக கவசம் அணியாமல் இருந்தார்.

இதனை கேட்ட சுகாதார ஆய்வாளர் மாரியப்பனை தகாத வார்த்தையால் பேசியது குறித்து சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் காரமடை காவல்துறையில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொற்றுநோய் தடுப்பு சட்டம் அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...