திருப்பூரில் மூதாட்டியை தாக்கிய திமுக பிரமுகர்: நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் மனு

துப்புரவு பணி செய்யும் மூதாட்டியை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


திருப்பூர்: துப்புரவு பணி செய்யும் மூதாட்டியை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக அருக்காணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 17ம் தேதி அன்று மங்கலம் அடுத்த அக்ரஹாரப்புதூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நின்றிருந்த போது அங்கு வந்த திமுகவை சேர்ந்தவரும் அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் ஜியாவு என்பவர் மூதாட்டி வளர்த்து வரும் ஆடு வெளியே வருவதாகவும், அதனை பிடித்து பிரியாணி செய்து விடுவேன் என கூறி உள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மது போதையில் இருந்த ஜியாவு மூதாட்டியை திட்டியதுடன் கன்னத்தில் அறைந்தார்.

இதில் மூதாட்டி நிலை தடுமாறி நின்றார். அவரை எச்சரித்து விட்டு ஜியாவு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த மூதாட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...