நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
கோவை: கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
கோவை இராமநாதபுரம் அரசுப்பள்ளி மைதானத்தில் மேல்நிலைத்தொட்டி அமைக்க பணி துவங்கியதை அடுத்து தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்த்து வரும் நிலையில் அரசியல் கட்சியினை சார்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, இந்தியா மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், கோவை மாவட்ட துணை ஆணையரிடம் கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர வேண்டியும் பள்ளியினை காக்க வேண்டியும் மனு அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-
கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பணிகளை மேற்கொள்ளும்போது அந்தப் பள்ளியில் இருந்த பல்வேறு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து உள்ளார்கள். தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானம் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறமைகள் பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே, பள்ளி மைதானத்தில் அமையவிருக்கும் மாநகராட்சி தண்ணீர் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைத்து பள்ளி மைதானத்தை பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆணையர், கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொண்டு வரும் நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு மாற்று இடம் அமைத்துத்தர கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்று உறுதி அளித்தார்.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் நீர்தேக்க தொட்டி அமைக்க மாற்று இடம் அமைத்துத்தர வேண்டும் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு வரைபடத்துடன் கூடிய மனு அளித்துள்ளார்.
அதனை, தன் ட்விட்டர் பக்கத்தில் “கோவை இராமநாதபுரம் அரசுப்பள்ளி மைதானத்தில் மேல்நிலைத்தொட்டி அமைக்க பணி துவங்கியதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மாற்று இடம் இருந்தும் பள்ளி மைதானத்தை எடுக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும்” என்று கோவை மாவட்ட ஆட்சியரையும் கோவை மாவட்ட ஆணையரையும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.