இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியில் சேர்நத கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம் என்பவர் வீட்டில் கடந்த 15ம் தேதி சொகுசு காரில் வந்த நபர்கள் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காசோலைகள் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்
இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவு பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், ஆலந்துறை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், ராஜசேகரன் முதல் நிலை காவலர்கள் பிரபாகரன், வினோத் சர்மா மெக்குரி, பிரபு, முத்து, பெண் காவலர் கார்த்திகா ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்
இந்த நிலையில், நேற்று மாலை கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கிணத்துக்கடவில் கல் குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் வந்த கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (36), கோவை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த மோகன்குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த 3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தை கொள்ளையடிக்க உதவியாக இருந்த கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ் (36), பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (47), பகவதி பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (47), காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கிய குற்றவாளிகளான கோவை பகுதி ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேத்யூ (60), காரணம்பேட்டை பகுதியை சேர்ந்த மகேஸ்வரன், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பைசல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.