கோவையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்ட கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது உசேனை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வந்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது உசேன் (42) தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதன்படி, முகமது உசேனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...