இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள், சுகாதார நடவடிக்கைகள், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நாள்தோறும் சராசரியாக, 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 பேருக்கும், கரடிமடை பகுதியில் 9 பேரும், நரசீபுரம் பகுதியில் 7 பேரும், பூச்சியூர் பகுதியில் 15 பேரும், செம்மேடு பகுதியில், 2 பேரும் என தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தொண்டாமுத்தூர் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள், சுகாதார நடவடிக்கைகள், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.