கோவை வடவள்ளி அருகே டாக்டர் படிக்க வெளிநாடு செல்ல இருந்த இளைஞர் தற்கொலை

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டில் மருத்துவ படிப்புக்கு செல்ல இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தைச் சேர்ந்தவர் டாரியஸ் (வயது 53), மருத்துவர். இவரது மனைவி கோவை பச்சப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மருத்துவரான டாரியஸ், ஜார்ஜியா நாட்டில் தனது மூத்த மகனுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் மனைவியும், 2-வது மகன் கிளிப் ஜோஷ், பிளஸ்-2 முடித்து விட்டு சோமையம்பாளையத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், டாரியஸ் வெளிநாட்டிலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோவை வந்துள்ளார். பின்னர், தனது 2-வது மகன் கிளிப் ஜோசயும் மருத்துவம் படிக்க ஜார்ஜியா நாட்டிற்கு வரும் மார்ச் மாதம் அழைத்துச் செல்ல முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

ஆனால், கிளிப் ஜோஷ்க்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை என்றும் அவர் பெற்றோருடன் இங்கேயே இருக்க விரும்பியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தனிமையில் இருப்பது போல் உணர்ந்ததால், இது குறித்து மருத்துவரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனையும் பெற்றுள்ளார், என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாரியஸ் மற்றும் அவர் மனைவி நேற்று இரவு திருச்சி சாலை, சுங்கத்தில் உள்ள நண்பர் ஒருவரைப் பார்த்து வருவதாக கிளிப் ஜோஷிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியே இருந்த கிளிப் ஜோஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து வடவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து கிளிப் ஜோஷின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...