கோவையில் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவையில் காவல்நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றவரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் பணிபுரிபவர் நாகராஜ் (35). இவர் நேற்று காவல்நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் நின்றுகொண்டிருந்தார். இரவு 8 மணி அளவில் காவல்நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டார்.

பிறகு தீப்பெட்டியை எடுத்து வைத்துக்கொண்டு தீக்குளிக்கப் போவதாகச் சத்தம் போட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ் சத்தம் போட்டு காவல்நிலையம் இருந்த மற்ற போலீசார் முருகேஷ் மற்றும் கதிரேசன் ஆகியோர் உதவியுடன் தீக்குளிக்க முயன்ற நபரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர். தீக்குளிக்க முயன்ற நபர் குடிபோதையிலிருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் சிவகுமார்(37) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் சுடுகாட்டில் வெட்டியானாக பணிபுரிந்து வருவதும் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை வெள்ளலூர் கக்கன் நகர் பகுதியில் உள்ள சிவக்குமார் அம்மா வீட்டிற்குக் கொண்டு போலீசார் விட்டு வந்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...