வால்பாறையில் சிறுத்தை தாக்கிய சிறுவனுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டது

வனத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வனத்துறை செயலாளர், கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தை தாக்கி காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 10,000 உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கிய சிறுவனுக்கு வனத்துறையினர் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கினர்.

கோவை மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட், 2 வது டிவிசனில் வசித்து வரும் 11 வயது சிறுவன், இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் எஸ்டேட் குடியிருப்பு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுத்தை தாக்கியதில், சிறுவனின் இடது தோள்பட்டை, முதுகு பகுதி மற்றும் மார்பு பகுதியில் சிறிய அளவிலான நகக் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தை தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் உத்தரவின்படி, வனத்துறை செயலாளர், கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் சிறுத்தை தாக்கி காயம் ஏற்பட்ட சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 10,000 உடனடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டது.



நிவாரண தொகையை, மானாம்பல்லி வனசரகர் மணிகண்டன் சிறுவனின் குடும்பத்தாரிடம் வழங்கினர். மேலும், சிறுவனுக்கு புதிய ஆடையும் வழங்கப்பட்டது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...