கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 100 சிறப்பு கொரோனா அதிகாரிகள் நியமனம்

கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை மாநகராட்சி சார்பாகத் தினமும் சுமார் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என அனைவரையும் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கோவை மாநகராட்சியை நோய்த் தொற்று இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதற்கு 100 வார்டுகளிலும் 100 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் 33 சிறப்பு அதிகாரிகளும், 7 நகராட்சிகளுக்கு 7 சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வது, தேவையான உதவிகள் செய்வது, தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட பணிகளைச் சரிவரச் செய்கிறார்களா? என நாங்கள் தினமும் ஆய்வு மேற்கொள்வோம்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல விரும்புபவர்கள் அரசு ஆம்புலன்சில் செல்கிறார்களா? தனியாக வாகனத்தில் எதுவும் செல்கிறார்களா? என தினமும் கண்காணிப்போம்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கு ஏற்றவாறு உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறுவது, தினமும் அறிக்கை தயாரித்து மாநகராட்சியிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...