சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைத் திரும்பப் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' வரவேற்பு

நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு, ஆக்கபூர்வமான வழிகளில் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளது.


கோவை: நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பு, ஆக்கபூர்வமான வழிகளில் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு சில யோசனைகளை தெரிவித்துள்ளது.

'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பின் தலைவர், சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:-

நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்ற மாநகராட்சியின் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. ஆக்கப்பூர்வமான முறையில் பல்வேறு வழிகளில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு வருவாயை அதிகரிக்க முடியும். அதற்கு எங்கள் அமைப்பு சார்பில் சில யோசனைகளை வழங்குகிறோம்.

1. பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் மற்றும் ராம்நகர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடங்களில் 'மல்டி லெவல் பார்க்கிங் திட்டத்தை' செயல்படுத்தலாம்.

2. மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாததால் ரோட்டில் மக்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பிரத்தியேக பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்தி அதற்கு தனியார் விதிக்கும் கட்டணத்தை விட பாதி கட்டணத்தில் மாதந்தோறும் வசூலிக்கலாம். இதுபோன்ற திட்டம் ஏற்கனவே பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பின்பற்றப்படுகிறது.

3. அங்கீகாரமற்ற லே-அவுட்க்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் மூலம் மாநகராட்சிக்கு சிறந்த முறையில் வருவாய் ஈட்ட முடியும்.

4. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பொழுது போக்கும் வகையில் பூங்காக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள உதவும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. இது போன்ற இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் இத்திட்டத்தை செயல்படுத்தினால் எதிர்வரும் காலங்களில் மக்கள் முழுமையாக இவற்றைப் பயன்படுத்தத் துவங்கும்போது சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கலாம்.

5. வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளன. சிறப்பு சலுகை திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கில் நிறுவையில் உள்ள சொத்து வரி பாக்கியை மாநகராட்சி நிர்வாகம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதுமட்டுமல்ல மேலும் பல்வேறு ஆக்கபூர்வமான வழிகளை செயல்படுத்துவதன் மூலம் கோவை மாநகராட்சியின் வருவாயை பல மடங்கு அதிகரிக்க முடியும். எதிர்வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் இத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...