மாநகராட்சியில் 1216, நகராட்சிகளில் 230, பேரூராட்சிகளில் 725 வாக்குச்சாவடிகள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில், மாநகராட்சியில் 1216, நகராட்சிகளில் 230, பேரூராட்சிகளில் 725 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.


கோவை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து மேற்கண்ட உள்ளாட்சிகளில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில், பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 1,216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இதில், மாநகராட்சி பகுதியில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 641 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 5 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 169 பேர் என மொத்தம் 14 லட்சத்து 16 ஆயிரத்து 738 பேர் வாக்களிக்க உள்ளனர்.

கோவையில் வால்பாறை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 3 நகராட்சிகள் ஏற்கனவே இருந்த நிலையில் கருமத்தம் பட்டி, கூடலூர், காரமடை, மதுக்கரை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. இந்த 7 நகராட்சிகளில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 25-ம், பொது வாக்குச்சாவடிகள் 180 என மொத்தம் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இதில் 92 ஆயிரத்து 56 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 116 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 11 பேர் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 183 பேர் வாக்களிக்கின்றனர். மாவட்டத்தில் தற்போது மொத்தம் 33 பேரூராட்சிகள் உள்ளன.

உள்ளாட்சித் தேர்தலுக்காக இந்த பேரூராட்சிகளில் ஆண், பெண் வாக்குச்சாவடிகள் தலா 135, பொது வாக்குச்சாவடிகள் 455 என மொத்தம் 725 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இதில், 2 லட்சத்து 69 ஆயிரத்து 604 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 81 ஆயிரத்து 36 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 59 பேர் என மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 699 பேர் வாக்களிக்கின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...