கோவை சாய்பாபாகாலனி சரக உதவி ஆணையர், சுகுமார் தலைமையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட தலைமை காவலர்கள் -- ஞானவேல் மற்றும் சுகந்தராஜா ஆகியோருக்கு, காவல் ஆணையர் பிரதீப் குமார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் குடோனில் வைத்து தடை செய்யப்பட்ட குட்காவை விற்று வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குடோனில் இருந்து 170 கிலோ எடை கொண்ட 11 மூட்டை குட்கா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று, கோவை ஜி.பி.சந்திப்பில் இருசக்கர வாகனம் மூலம் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற வெரையிட்டி ஹால் சாலை பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் மணியகாரம்பாளையம் பகுதியை அடுத்த அஞ்சுகம் நகர் பகுதியில் குடோன் வைத்து குட்கா விநியோகம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
அவர் கொடுத்த தகவலின் பேரில், குடோனில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், அங்கிருந்து சுமார் 170 கிலோ எடையிலான 11 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.