வால்பாறை அருகே வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில், சிறுவன் படுகாயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி.
கோவை: வால்பாறை அருகே 11 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருகிறார்கள்.
இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் பிராஜ்நாகசிய என்பவர் மகன் தீபக் வீட்டிற்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் இருந்த முள்புதர்கள் உள்ள இடத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று தீபக்கை தாக்கியது.
சிறுவன் கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கற்களை எறிந்து சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை தேயிலை தோட்டத்திற்குள் ஓடியது. சிறுவனை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுத்தையின் நகக்கீறல்கள் தீபக்கின் முதுகில் மற்றும் கழுத்தில் மூன்று இடங்களில் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.