கிணத்துக்கடவு அருகே மாயமான கூலித்தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு

உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் மாயமான கூலித்தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெரியகுப்பம் (77) கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை, மேலும் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பெரியகுப்பனின் உறவினர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், கொண்டம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கிணற்றில் கிடந்த முதியவரின் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் பெரியகுப்பம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...