டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ். ரோடு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை கண்டு பிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த மதுபாட்டில்களையும் விற்பனை செய்த நபரையும் கைது செய்து விசாரணை செய்ததில் கிணத்துக்கடவு மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பதும், இவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.