பொள்ளாச்சி அருகே பைக் மீது வேகமாக வந்து மோதிய கார்... காற்றில் பறந்த இருவர் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

கோவை அருகே உள்ள மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் மற்றும் ராஜசேகரன் இருவரும் பழனி பாதயாத்திரை செல்லும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்காக நேற்று மாலை மதுக்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது G.சங்கம்பாளையத்தை சேர்ந்த கௌதம் என்பவர் காரில் பொள்ளாச்சி நோக்கி வந்த பொழுது எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியதில் ஜோதீஸ்வரன், ராஜசேகர் இருவரும் பறந்து சென்று விழுந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

விபத்தில ராஜசேகர் சிறிய காயங்களுடனும் ஜோதிஷ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் காரை ஓட்டி வந்த கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...