கோவை சிங்காநல்லூரில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் மாயம்..! போலீசார் விசாரணை

ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.1.50 லட்சத்தை இழந்து விட்டதால், தந்தை கண்டித்ததால், விக்னேஷ்வரன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். விக்னேஷ்வரன் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

அதில், அவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்து விட்டதால், அவரது தந்தை செல்வராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விக்னேஷ்வரன் கோபித்து கொண்டு, கோட்டூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மனவேதனையில் இருந்த அவர், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது பாட்டி அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை என்பதால், உடனே இதுகுறித்து அவர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், காணாமல் போன மகனை குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து மாயமான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...