கோவை இருகூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

இருகூர் சிவசக்தி நகரில் பூட்டிய வீட்டில் தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிப்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இருகூர், சிவசத்தி நகரை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 39). இவர் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது தாயின் இறுதி சடங்குக்கு புதுகோட்டை சென்றுள்ளார்.

அப்போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராமநாதனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து,. உடனே ராமநாதனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார். இதைகேட்ட ராமநாதன் உடனே ஊருக்கு திரும்பினார்.

வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த கம்மல், மோதிரம், தங்க காசு உள்பட 9 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி குத்து விளக்கு, குங்குமசிமில் உள்பட வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, ராமநாதன் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதேபோன்று, போத்தனூர் சபரி நகர் 2 -வது வீதியில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்ற குடும்பத்தாரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

உடனே இதுகுறித்து அந்த குடும்பத்தாரின் உறவினர் ரோஷன் கோபால கிருஷ்ணன் அமெரிக்காவில் உள்ள குடும்பத்தாருக்க தகவல் தெரிவித்தார். பின்னர், போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...