கோவையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபர் கைது; காலாவதியான விசாவில் தங்கிருந்தது கண்டுபிடிப்பு

சரவணம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் ஆப்பிரிக்கவில் உள்ள ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சிப்பின்ஸ் வயது 32, என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்ததும் தெரியவந்தது.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக தங்கி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ருவாண்டா நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சரவணம்பட்டி பகுதியை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு கல்லூரி முன்பு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வெளிநாட்டு வாலிபர் ஒருவரை கைது பிடித்தனர்.

பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அவர் ஆப்பிரிக்கவில் உள்ள ருவாண்டா நாட்டைச் சேர்ந்த சிப்பின்ஸ் வயது 32, என்பதும், இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து முடித்ததும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அவருடைய பாஸ்போர்ட்டை டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பதும், விசா முடிந்தும் ஆறு வருடங்களாக கோவையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், கல்லூரி மாணவர்களைப் போல கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...