தற்போது வரை கோவை மாவட்டத்தில் நோய் தொற்று பரவ அதிகரித்து வந்தாலும் தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்பு தற்போது வரை ஏற்படவில்லை.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலை தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பொங்கல் முடிந்து அனைத்து தொழில் நிறுவனங்களும் வரும் திங்கட்கிழமை முதல் முழுவீச்சில் செயல்பட துவங்கிய நிலையில், நோய்த்தொற்று பரவல் மிகுந்த சவாலை ஏற்படுத்தி உள்ளதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர், ரமேஷ் பாபு கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை முடிந்து 60 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். கோவை மாவட்டம் முழுவதும் 60 முதல் 70 சதவீத தொழில் நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று உள்ள தொழிலாளர்கள் இந்த வார இறுதியில் கோவை திரும்புவார்கள். எனவே, அடுத்த வாரம் முதல் அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுவீச்சில் செயல்பட துவங்கும்.
இத்தகைய சூழலில் கொரோனா நோய்தொற்று பரவல் அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட தொழிலாளர்கள் அவர்களே தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறிய பயன்படும் சுயபரிசோதனை கிட் மொத்தமாக வாங்கும் பொழுது குறைந்த விலையில் கிடைக்கிறது. அதை பல தொழில் நிறுவனங்கள் வாங்க துவங்கியுள்ளனர். இதனால் அறிகுறிகளுடன் பணிக்கு வரும் தொழிலாளர்களை உடனடியாக பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த முடியும் "
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA) தலைவர், கே. வி. கார்த்திக் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் அதாவது 90 முதல் 95 சதவீதம் வரை 2 தவணை தடுப்பூசியும் செலுத்திவிட்டனர். தவிர நோய் தொற்று பரவல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் சீரான முறையில் பின்பற்றி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் சில நாட்களாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் எதிர்வரும் வாரங்களில் தொழில் துறையினருக்கு மிகுந்த சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு தயாரான நிலையில் அனைவரும் உள்ளனர்."
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு ஊரக தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது:-
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்தது 10 நாட்கள் கழித்து நான் திரும்பி வருவார்கள். அடுத்த வாரம் முதல் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெறத் துவங்கும். தற்போது வரை கோவை மாவட்டத்தில் நோய் தொற்று பரவ அதிகரித்து வந்தாலும் தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் பாதிப்பு தற்போது வரை ஏற்படவில்லை." என்று தெரிவித்தார்.