தொழிலாளி சடலமாக கிடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, குற்றவாளி சிக்கினார்.
கோவை: கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த சண்முகம் (45), நேற்று முன்தினம் வழக்கம் போல வேலை முடிந்ததும் இவர் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு இரவு படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற மர்ம நபர், சண்முகத்தின் தலையை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே, நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், ஒரு நபர் இறந்து கிடப்பதை பார்த்து சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சண்முகம் முன் விரோத காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் தொழிலாளி சடலமாக கிடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சண்முகம் மீது ஒருவர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், கவுண்டம் பாளையம் பிரபு நகரை சேர்ந்த பிரகாஷ் (50) என்பவர் சண்முகத்தின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகவும், இதனால் ஆத்திரத்தில் உடல் முழுவதையும் துணியால் போர்த்தி படுத்திருந்த சண்முகத்தின் காலில் போடுவதாக கருதி தலையில் கல்லை போட்டு விட்டதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.